மக்களே உஷார்…. அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23½ லட்சம் மோசடி….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தாலுகா கனகசமுத்திரம் பகுதியில் வசிப்பவர் அமுதா (46). இவர் அங்குள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்ததில், எனது மகன் கல்லூரி படித்து முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்தான் என்றும் இந்நிலையில் கடந்த ஆண்டு பள்ளிக்குப்பம் ரோடு பகுதியில் வசிக்கும் குடும்ப நண்பர்கள் 2 பேர் வீட்டிற்கு வந்து மின்சார துறையில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள் என்று தெரிவித்தார். ஆனால் அதற்கு ரூ.13 லட்சம் செலவாகும் என்று தெரிவித்ததை உண்மை என்று நம்பி முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கொடுத்ததாக தெரிவித்தார். அப்போது அவர்கள் மேலும் 2 அரசுத்துறையில் வேலைகள் இருப்பதாகவும், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இது பற்றி சொல்லுங்கள் என கூறினார்கள்.

அதன்படி எங்கள் ஊரை சேர்ந்த உறவினர்களிடம் இது பற்றி கூறி அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வாங்கி கொடுத்தேன் என்று அமுதா கூறினார். சில நாட்களுக்கு பின் 2 பேரும் உங்களுக்கு அரசு வேலை கிடைத்து விட்டது என்று அரசாங்க முத்திரையிட்ட பணி நியமன கடிதத்தை காண்பித்தனர். பின்னர் நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் ரூ.19½ லட்சம் கொடுத்தேன் எனவும் மொத்தமாக ரூ.23½ லட்சம் கொடுத்ததாகவும் கூறினார். ஆனால் இதுவரை அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிற நிலையில், நான் கொடுத்த பணத்தை பெற்றுத்தந்து, அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

Leave a Reply