வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னையை அடுத்த கீரைசாத்து என்ற ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் புகையால் துர்நாற்றம் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் குடிநீர் பாதிப்படைவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் பின் இது பற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பரிந்துரைத்தனர்.
அதன்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் தொல்காப்பியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அந்த தொழிற்சாலையில் இருந்த மண் மற்றும் குடிநீர் போன்றவற்றை ஆய்வுக்காக சேகரித்து எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.