வேல்முருகன் காரை தாக்கியதால் சுங்கச்சாவடியில் பரபரப்பு ….

வேல்முருகன் காரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதால் ,வேல்முருகன் சுங்கச்சாவடி முன்பு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் .

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே சுங்கச்சாவடிகள் இருக்கக் கூடாது என்று கடுமையாக போராடி வந்தவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பாக கூட சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த சுங்கச்சாவடி ஒன்றை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் அடித்து நொறுக்கினர் .

இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தனது கார் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார் .

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது காரில் மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு என்ற இடத்தில் உள்ள சுங்கச் சாவடியை கடந்து சென்றபோது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவரது காரை நிறுத்தி கட்டணம் கேட்டுள்ளனர்  .ஏற்கனவே  வேல்முருகன்  இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தாமல் இலவசமாக செல்லக் கூடிய அடையாள அட்டை ஒன்றை அரசாங்கத்திடம் விண்ணப்பித்து பெற்றுள்ளனர். அந்த அட்டையில் இந்தியா முழுவதும் செல்வதற்கு அனுமதி பெற்று விட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது .

அதை படிக்க தெரியாத சுங்கச்சாவடி ஊழியர்கள்  வேல்முருகனின் கார் ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது ஒரு கட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஓட்டுனரையும் காரையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது இதனை அடுத்து வேல்முருகன் மறியலில் ஈடுபட்டுள்ளார் . இதனை அடுத்து இரு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர் மீதமுள்ளவர்கள் தப்பி ஓடினர் இந்நிலையில் இந்த பிரச்சனையால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளனர்..