வேலூர் மக்களவை தேர்தல்… அதிமுக வேட்பாளர் A.C.சண்முகம் வேட்புமனு தாக்கல்..!!

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள  புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் வேட்மனுவை தாக்கல் செய்தார். 

வேலூரில் ஏப்ரல் 18ஆம்  தேதி நடைபெற  இருந்த தேர்தலானது  ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம்  தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று முதல்  18ஆம்  தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for புதிய நீதி கட்சி தலைவர் AC சண்முகம்

இந்நிலையில் அதிமுக ஆதரவுடன்  போட்டியிட உள்ள  புதிய நீதிக் கட்சித் தலைவரான A.C.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி   வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும்,தேர்தல் அதிகாரியுமான சண்முக சுந்தரத்திடம் தாக்கல் செய்தார்.இந்நிகழ்வில் அதிமுக,பாமக,உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள்  ஏராளமானோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *