வேலூர் மருத்துவமனையில் திடீரென இருவர் உயிரிழப்பு… விளக்கமளித்த மாவட்ட அதிகாரிகள்..!!

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் இரண்டு பேர் திடீரென மரணம் அடைந்த சம்பவத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவத் துறை துணை இயக்குனர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் மொத்தம் 510 படுக்கைகள் உள்ளதாகவும், அதில் 285 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த இருவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என அவர்கள் விளக்கம் அளித்தனர். இருதய அடைப்பு மற்றும் ஸ்கைடோ கம்ஸ்டோம் உள்ளிட்டவற்றால் அவர்கள் இருவரும் மரணமடைந்துள்ளதாக அப்போது அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த கலைச்செல்வி உயிரிழந்த செய்தியை கேட்டு சக பணியாளர்கள் அதிர்ச்சியில் மயக்கமடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் அப்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *