வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு…. இனி அந்த எண்களை யூஸ் பண்ணலாம்?… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

கடந்த 2016-ம் வருடம் முதல் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கிய யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு இத்திட்டம் வாயிலாக டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் யுபிஐ சேவைகளை பெற, இந்திய மொபைல் எண்ணைக் கொண்டிருக்க வேண்டிய சிம் பைண்டிங் செயல்முறையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. எனினும் தற்போது அதற்குரிய முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, 2023-ம் வருடம் ஜனவரி 10-ம் தேதியன்று ஒரு செயல்பாட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அவற்றில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) யுபிஐ வாயிலாக பணம் செலுத்துவதற்காக அவர்களின் சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கையானது என்ஆர்ஐ-கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதோடு இந்திய எண்ணைப் பெறாமலேயே தங்களது இந்திய வங்கிக் கணக்குகளில் இருந்து இந்திய வணிகர்கள் மற்றும் பிறருக்கு பணம் செலுத்த இந்த நடவடிக்கை பயன் உள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply