வேலைக்கு சேர்ந்து 2 நாட்களில்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

வேலைக்கு சேர்ந்து 2 நாட்களில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள செம்டாபாளையம் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் குக்கிளி மாவட்டத்தை சேர்ந்த அமல்பால் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்த 2 நாட்களே ஆன நிலையில் மிகவும் சோகமாக இருந்துள்ளார். அதன்பின் அவரது மனைவியிடம் கைப்பேசியில் கோபமாக பேசியுள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அமல்பாலின் உறவினர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அமல்பால் அந்த போனை எடுக்காததால் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு சென்ற உரிமையாளர் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட அமல்பாலை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுபற்றி அம்மாபேட்டை காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அமல்பாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *