நரம்பு இழுத்தல்… தீர்வு இதோ…!!

நரம்பு இழுத்தால் என்ன செய்யலாம் எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்பது பற்றிய தொகுப்பு

சுடு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து காட்டன் துணியை தண்ணீரில் முக்கி நரம்பு இழுத்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை சேர்த்து காய்த்து வடிகட்டி அந்த எண்ணையை நரம்பு இழுத்த இடத்தில் அழுத்தித் தேய்த்து வர பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

குளிர்ந்த உணவு பொருட்கள் வாய்வு அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய தானியங்களை தினமும் உண்ண வேண்டும்.

பழ  சாலட் தேன் கலந்து சாப்பிடுவது நரம்பை பலப்படுத்த உதவும்.

விட்டமின் இ, சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழம், ஆரஞ்சு, பாதாம், முந்திரி போன்ற உணவுகளை சாப்பிடவேண்டும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் அரை மணி நேரம் முன்பு தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கனமான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.