இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம்……!!

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமாருக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக  வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின்  மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று  17-வது நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கியது.இதில் இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமாருக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்க அவரும் சபாநாயகராகபதவியேற்றுக்கொண்டார். அதே போல இன்றும், நாளையும் நடக்கும் மக்களவையில் புதிய உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர்  எம்.பி. வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.