தொடர்ந்து பெய்யும் மழை…. இடிந்து விழுந்த வீடு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

பலத்த மழை பெய்ததால் வீடு இடிந்து சேதமடைந்தது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பெருமாள்கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் சின்னகாமு என்பவரது தோட்டத்தில் இருக்கும் வீடு இடிந்து விழுந்தது.

அந்த சமயம் சின்னகாமு தனது மனைவி பெருமாயியுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *