வெடி விபத்தில் சிக்கிய நபர்…. 14 மாதங்களுக்கு கோமா…. பின் நேர்ந்த சோகம்….!!

பெய்ரூட் வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து 14 மாதங்களுக்குப் பிறகு ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கபட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் திடீரென வெடித்தது. இதில் பெய்ரூட் நகரமே முழுவதுமாக தகர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வெடிவிபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் 6000 மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

மேலும் மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்துள்ளனர். இந்நிலையில் பெய்ரூட் வெடிவிபத்தில் படுகாயமடைந்த இப்ராகிம் ஷர்ப் என்ற 35 வயது நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சை பின் கோமா நிலைக்கு சென்றதால் மருத்துவமனையிலேயே 14 மாதங்கள் இருந்துள்ளார். அதன்பின் அவரது பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

மேலும் இப்ராகிம் ஷர்ப்-ஐ வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாததால் அவரது பெற்றோர் அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் மறுவாழ்வு மையத்திலிருந்த அவர் குணமடைந்து வீடு திரும்பிய மூன்றாவது நாளே திடீரென உயிரிழந்துவிட்டார். இந்த தகவலை இப்ராகிம் ஷர்ப் சகோதரர் உறுதி செய்துள்ளார். குறிப்பாக பெய்ரூட் வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து 14 மாதங்களுக்குப் பிறகு இப்ராகிம் ஷர்ப் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *