வி.சி.க மற்றும் கொ.ம.தே கட்சி போட்டியிடும் தொகுதிகள் ……சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை…!!

விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கின்றது .

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதியும் ,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் படுகின்றது  என்று  பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யும் நோக்கத்துடன் இன்னும் சற்று நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் இரண்டு கட்சி நிர்வாகிகளின் பிரதிநிதிகளும் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்  திருமாவளவன் , ரவிக்குமார்_ரும்  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் இன்னும் சற்று நேரத்தில் அண்ணா அறிவாலயம் வர இருக்கின்றார்கள் .

Image result for ஸ்டாலின் ஈஸ்வரன்

 

இதில் திமுக தரப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும்  துரைமுருகன் தலைமையிலான  ஆறு பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு ஆகியோர் பங்கேற்று வி.சி.க  மற்றும் கொ.ம.தே.க  போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பது குறித்து இன்றைய தினமே பேசி இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரியுள்ளது . மேலும் இதில் விடுதலை சிறுத்தைக்கு சிதம்பரம் , விழுப்புரம் தொகுதியும் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகின்றது.