வயது குறைந்த பெண்ணுடன் டேட்டிங்?…. Twitter-ல் டிரெண்டிங்கில் இருக்கும் டைட்டானிக் நடிகர்…..!!!!!

லியோனார்டோ டிகாப்ரியோ(48) அடுத்து மார்ட்டின் ஸ்கோர்செஸியின் கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூனில் நடிக்கிறார். இவர் 19 வயதுள்ள இஸ்ரேலிய மாடலழகி ஈடன் பொலானியுடன் விருந்தில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளிவந்ததது. இதையடுத்து டிகாப்ரியோ, தன்னை விட வயது குறைந்த பெண்ணுடன் டேட்டிங் செய்வதாக செய்தி பரவியது.

அதாவது டிகாப்ரியோ, காதல் வதந்திகளால் twitterல் டிரெண்டிங்கில் இருக்கிறார். பாடகர் எபோனி ரிலேயின் இசை வெளியீட்டு விழாவில், ஈடனுடன் லியோனார்டோ அமர்ந்து இருந்தார். 25 வயதிற்குட்பட்ட பெண்களை மட்டுமே காதலிப்பதில் பெயர் பெற்ற டிகாப்ரியோ, 1997ல் “டைட்டானிக்” படம் வெளிவந்த 6 வருடங்களுக்கு பிறகு பிறந்த பொலானியுடன் டேட்டிங் செய்ததாக சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் மறுப்பு தெர்வித்துள்ளனர்.