வசூலில் தெறிக்கவிடும் “பதான்” படம்…. 3 நாள் முடிவில் இவ்வளவு கோடியா?…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் அதுவே அப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது.

அனைத்து இடங்களிலும் பதான் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் நிலையில், வசூலிலும் தெறிக்கவிட்டு வருகிறது. அதன்படி படம் வெளியான 3 நாள் முடிவில் மொத்தம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சில ரசிகர்கள் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்பட மொத்த கலெக்ஷனையும் 3 நாட்களில் ஷாருக்கான் படம் வசூல் செய்து உள்ளதாக பதிவுகள் போட்டு வருகின்றனர்.