ராமநாதபுரம் புதிய எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்பு ….!!

ராமநாதபுரம் மாவட்ட காவல் காண்காளிப்பாளராக (எஸ்.பி.) இருந்த ஓம் பிரகாஷ் மீனா திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மண்டல குடிமைப்பொருள் காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், ராமநாதபுரம் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார்

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமர் பல் மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு குடிமைப்பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பத்தூர், அருப்புக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் சென்னை மண்டல குடிமைப்பொருள் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.புதிதாக பொறுப்பேற்றுள்ள வருண்குமார் எஸ்பிக்கு ஓம் பிரகாஷ் மீனா எஸ்பி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதன் பின்னர் பேசிய வருண்குமார் எஸ்பி தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே சாலை விபத்துகளை குறைத்ததில் முன்னோடியாகத்திகழ்கிறது.சாலை விபத்துகள் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைந்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பெண்கள், குழந்தைகள் மீதான புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் 24 மணி நேரமும் எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.24மணி நேரமும் செயல்படும் வகையில் 94899-19722 என்ற புதிய அலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் எந்தப்பிரச்னைகளாலும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *