வரும் 7 ஆம் தேதி அதிமுக உட்கட்சி தேர்தல்…. இன்று வேட்புமனு தாக்கல்….!!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தேர்தல் முடிவு 8- ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி, கட்சியின் அமைப்புகளின் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்ற விதிமுறையின் படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். மேலும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 5-ம் தேதி 11:25 மணி அளவில் நடைபெறும். தொடர்ந்து வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு 6_ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8-ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் முடிவும் அன்றைய தினம் வெளியாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.