வரும் 3-ஆம் தேதி வரை…. மீனவர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

புயல் எச்சரிக்கை காரணமாக வருகிற 3 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு போக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(பிப்,.1) மதியம் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமானது தெரிவித்து உள்ளது. இதனால் கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45-65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.

அதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே தென்மேற்கு வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா, கன்னியாகுமரி கடலில் வருகிற 3-ஆம் தேதி வரை கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.