தளபதி படத்தை சீரியல் என விமர்சனம்…. விஜய்யின் அப்பா கொடுத்த பதிலடி….!!

நடிகர் விஜய்யின் வாரிசு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, ரசிகர்களுக்கிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் ஒரு தரப்பினர் இப்படத்தை சீரியல் போல இருப்பதாக விமர்சித்துள்ளனர். எப்படி இருந்தாலும் அதிக அளவில் விமர்சனங்களை இப்படம் பெற்று வந்தாலும், பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை தான் பெற்று வருகிறது. இந்தப் படம் திரையில் வெளியாகி 11-ஆம் நாளே 250 கோடியை கடந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி இதை பற்றி பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, வாரிசு படத்தை சீரியல் போல இருக்கிறது என விமர்சித்தவர்கள் எல்லாரும் தற்போது அதற்கு வந்திருக்கும் வசூலை பற்றி கேள்விபட்டீர்களா? என கூறியுள்ளார். மேலும் ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ படம் என அனைவரும் கூறியுள்ளது  பற்றியும்  எஸ்ஏசி பேசி இருக்கிறார்.