வரலாற்றில் இன்று மே 24….!!

கிரிகோரியன் ஆண்டு :  144 ஆம் நாளாகும்.

நெட்டாண்டு :  145 ஆவது நாள்.

ஆண்டு முடிவிற்கு :  221 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்:

1218 – ஐந்தாவது சிலுவைப் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர்.

1276 – மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார்.

1487 – இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான்.

1607 – 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும்.

1626 – பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை விலைக்கு வாங்கினார்.

1738 – ஜோன் உவெசுலி மெதடிச இயக்கத்தை ஆரம்பித்தார்.

1762 – பேச்சுவார்த்தைக்காக இலங்கை வந்து சேர்ந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதி ஜோன் பைபசு என்பவரை கண்டி மன்னர் கீர்த்தி சிறீ இராஜசிங்கன் வைபவரீதியாக வரவேற்றார்.

1798 – அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.

1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார்  வெனிசுவேலா மீதான முற்றுகையை ஆரம்பித்தார்.

1832 – இலண்டன் மாநாட்டில் கிரேக்க இராச்சியம் அறிவிக்கப்பட்டது.

1844 – முதலாவது மின்னியல் தந்திச் செய்தியை சாமுவெல் மோர்சு என்பவரால் வாசிங்டனில் இருந்து பால்ட்டிமோருக்கு அனுப்பினார். அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought (விவிலியத்தில் எண். 23:23).

 

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் வேர்ஜீனியாவின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றினர்.

1883 – நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் 14 ஆண்டுகள் கட்டுமானத்தின் பின்னர் பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது.

1900 – இரண்டாம் பூவர் போர்: ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை இணைத்துக் கொண்டது.

1901 – தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆத்திரிய-ஆங்கேரியுடன் போரை ஆரம்பித்தது.

1940 – நாடு கடந்த நிலையின் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் லியோன் திரொட்ஸ்கி மீது மெக்சிக்கோவில் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் “பிஸ்மார்க்” என்ற செருமனியப் போர்க்கப்பல் “ஹூட்” என்ற பிரித்தானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1962 – மேர்க்குரித் திட்டம்: அமெரிக்க விண்ணோடி ஸ்கொட் கார்ப்பென்டர் பூமியை அவ்ரோரா 7 விண்பெட்டகத்தில் மூன்று முறை வலம் வந்தார்.

1967 – இசுரேலின் செங்கடல் கரையை எகிப்து முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.

1981 – எக்குவடோர் அரசுத்தலைவர் யைம் அகிலேரா, அவரது மனைவி, அவரது குழுவினர் விமான விபத்தில் இறந்தனர்.

1982 – ஈரான் – ஈராக் போர்: ஈரான் கொரம்சார் துறைமுகப் பகுதியை ஈராக்கிடம் இருந்து மீளக் கைப்பற்றியது.

1991 – எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை தனது நாட்டுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இசுரேல் ஆரம்பித்தது.

 

1992 – தாய்லாந்தில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து, அந்நாட்டின் கடைசி சர்வாதிகாரி சுச்சின்டா கிரப்பிரயூன் பதவி விலகினார்.

1992 – பொசுனியா எர்செகோவினாவில் கொசாரக் பகுதியில் செர்பிய இராணுவத்தின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பமானது.

1993 – எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.

1994 – நியூயார்க், உலக வர்த்தக மையத்தில் 1993 ஆம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட நால்வருக்கு 240 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

1999 – கொசோவோவில் போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்காக சிலோபதான் மிலொசேவிச் மீது நெதர்லாந்து, டென் ஹாக் நகரில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

2000 – 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இசுரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர்.

2000 – இலங்கையில் நோர்வே தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.

2006 – விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.

2007- ஈழப்போர்: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.

2007 – ஈழப்போர்: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.

2014 – பெல்ஜியம், பிரசெல்சு நகரில் யூத அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்.

2014 – கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையில் ஏஜியன் கடலில் 6.4 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றது. 324 பேர் காயமடைந்தனர்.

 

பிறப்புகள்:

1686 – டானியல் பேரென்கைட், போலந்து-செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1736)

1794 – வில்லியம் ஹியூவெல், ஆங்கிலேய மெய்யியலாளர், மதகுரு (இ. 1866)

1819 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா (இ. 1901)

1905 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1984)

1913 – கண. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பதிப்பாளர் (இ. 1997)

1921 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்

1928 – ஜனா கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசியல்வாதி (இ. 2007)

1929 – கரோலின் சூமேக்கர், அமெரிக்க வானியலாளர்

1941 – பாப் டிலான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்

1942 – பிரேசர் இசுட்டோடார்ட்டு, இசுக்காட்டுலாந்திய வேதியியலாளர்

1946 – தென்சு சில்லர், துருக்கியின் 22-வது பிரதமர்

1949 – ரொஜர் டிக்கின்சு, ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர்

1953 – ஆல்ஃப்ரெட் மோலினா, ஆங்கிலேய நடிகர்

1955 – ராஜேஷ் ரோஷன், இந்திய இசையமைப்பாளர்

 

இறப்புகள்:

1543 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473)

1950 – ஆர்ச்சிபால்ட் வேவல், இந்தியாவின் 43வது தலைமை ஆளுநர் (பி. 1883)

1981 – சி. பா. ஆதித்தனார், தமிழக ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1905)

1981 – ஆ. தியாகராஜா, இலங்கை அரசியல்வாதி (பி. 1916)

2008 – சி. வேலுசுவாமி, மலேசிய எழுத்தாளர் (பி. 1927)

2012 – பாலாம்பிகை நடராசா, இலங்கை வானொலிக் கலைஞர், இசைக்கலைஞர்

2014 – டேவிட் அலன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1935)

2016 – இரா. வை. கனகரத்தினம், இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் (பி. 1946)

சிறப்பு நாள்:

பொதுநலவாய நாள் (பெலீசு)

விடுதலை நாள் (எரித்திரியா, எத்தியோப்பியாவில் இருந்து, 1993)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *