வரலாற்றில் இன்று நவம்பர் 26…!!

நவம்பர் 26  கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1161 – சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர்.

1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக்.

1789 – சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது.

1817 – கொழும்பைப் பெரும் சூறாவளி தாக்கியதில் பல கப்பல்களும், படகுகளும் கடலில் மூழ்கின.[1]

1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

1918 – மொண்டெனேகுரோவின் நாடாளுமன்றம் செர்பியா இராச்சியத்துடன் இணைய வாக்களித்தது.

1922 – எகிப்திய பார்வோன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.

1941 – பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.

1942 – நோர்வேயைச் சேர்ந்த 572 யூதர்கள் நாட்சி ஜெர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: ரோனா என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியின் வான்படையினரால் நடுநிலப் பகுதியில் வைத்துத் தாக்கியழிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வி-2 ஏவுகணை ஐக்கிய இராச்சியத்தில் நியூ கிராஸ் வீதியில் உள்ள வுல்வர்த்சு பல்பொருள் அங்காடி மேல் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் மீது வி-1, வி-2 ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது.

1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.

1950 – கொரியப் போர்: மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் ஐநா படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தன.

1957 – சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.

1965 – சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.

1970 – குவாதலூப்பின் பாசு-தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும்.

1983 – இலண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.

1986 – இரண்டாம் உலகப் போர்க்கால நாட்சிகளின் திரெப்ளிங்கா வதை முகாமின் பாதுகாப்பு அதிகாரி ஜான் தெம்சான்சுக் மீதான விசாரணைகள் எருசலேமில் ஆரம்பித்தன.[2]

1991 – அசர்பைஜான் நாடாளுமன்றம் நகோர்னோ கரபாக் மாகாணத்தின் சுயாட்சி அதிகாரத்தைத் திரும்பப் பெற்று அதன் நகரங்களின் பெயர்களை மூலப் பெயர்களுக்கு மாற்றியது.

1998 – இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கன்னா நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.

1999 – வனுவாட்டுவை 7.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் ஆழிப்பேரலை ஏற்பட்டது. 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.

2001 – நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.

2002 – இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.

2003 – கான்கோர்டு வானூர்தி சேவை தனது கடைசிப் பயணத்தை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மீது மேற்கொண்டது.

2008 – மும்பாய் நகரில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

2011 – ஆப்கானித்தானில் நேட்டோ படைகள் பாக்கித்தான் இராணுவ முகாம் மீது தவறுதலாகத் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

2011 – செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் கியூரியோசிட்டி தரையுளவியுடன் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

2013 – இலங்கையில் “பயணிகள் காசோலை” வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1857 – பேர்டினண்ட் டி சோசர், சுவிட்சர்லாந்து மொழியியலாளர் (இ. 1913)

1890 – சுனிதி குமார் சாட்டர்சி, இந்திய மொழியியலாளர், கல்வியாளர், இலக்கியவாதி (இ. 1977)

1919 – ராம் சரண் சர்மா, இந்திய வரலாற்றாளர் (இ. 2011)

1921 – வர்கீஸ் குரியன், இந்தியப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2012)

1923 – வி. கே. மூர்த்தி, இந்திய ஒளிப்பதிவாளர் (இ. 2014)

1926 – யஷ் பால், இந்திய அறிவியலாளர் (இ. 2017)

1926 – ரபி ராய், இந்திய அரசியல்வாதி (இ. 2017)

1930 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (இ. 2010)

1933 – கோவிந்த் பன்சாரே, இந்திய இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் (இ. 2015)

1934 – யோசப் பரராஜசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 2005)

1936 – லலித் அத்துலத்முதலி, இலங்கை அரசியல்வாதி (இ. 1993)

1939 – அப்துல்லா அகுமது பதவீ, மலேசியாவின் 5வது பிரதமர்

1948 – வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்து நாதசுவரக் கலைஞர்

1948 – எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய-அமெரிக்க உயிரியலாளர்

1954 – வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ. 2009)

1972 – அர்ஜூன் ராம்பால், இந்திய நடிகர்

1973 – பீட்டர் பாசிநெல்லி, அமெரிக்க நடிகர், இயக்குநர்

1983 – கிரிச் ஹக்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர், தொழிலதிபர், முகநூலை ஆரம்பித்தவர்

1986 – ஆனந்த் சங்கர், தமிழகத் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர்

1990 – மீரா நந்தன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1990 – ரீட்டா ஓறா, கொசோவா-ஆங்கிலேய பாடகி, நடிகை

இன்றைய தின இறப்புகள்

399 – சிரீசியஸ் (திருத்தந்தை) (பி. 334)

1504 – முதலாம் இசபெல்லா (பி. 1451)

1883 – சோஜோர்னர் ட்ரூத், அமெரிக்கச் செயற்பாட்டாளர் (பி. 1797)

1896 – பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1824)

1930 – பொன்னம்பலம் இராமநாதன், இலங்கை அரசியல்வாதி, தேசியத் தலைவர் (பி. 1851)

1946 – சா. கிருஷ்ணசுவாமி ஐயங்கார், இந்திய வரலாற்றாளர், திராவிடவியலாளர் (பி. 1871)

1964 – விசெவோலத் சரனோவ், உருசிய வானியலாளர் (பி. 1901)

2006 – ஜி. வரலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1926)

2008 – துகாராம் ஓம்பலே, மும்பாய் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியக் கால்துறை அதிகாரி

2014 – எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)

2015 – நொபொரு காராசிமா, சப்பானிய வரலாற்றாசிரியர், எழுத்தாளர், தமிழறிஞர் (பி. 1933)

2018 – ஐராவதம் மகாதேவன், தமிழக கல்வெட்டு ஆய்வாளர் (பி. 1930)

இன்றைய தின சிறப்பு நாள்

குடியரசு நாள் (மங்கோலியா)

அரசியல் சாசன தினம் (இந்தியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *