வரலாற்றில் இன்று பிப்ரவரி 20…!!

பெப்ரவரி 20  கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.

1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.

1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.[1]

1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1810 – பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு எதிரான கிளர்ச்சிப் படையின் தலைவர் அந்திரயாசு ஓஃபர் தூக்கிலிடப்பட்டார்.

1818 – இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.[2]

1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.

1846 – தேசிய விடுதலைக்கான போராட்டமாக போலந்துக் கிளர்ச்சிவாதிகள் கிராக்கோவ் நகரில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

1865 – உருகுவைப் போர் முடிவுக்கு வந்தது. அரசுத்தலைவர் தொமாசு விலால்பாவுக்கும் கிளர்ச்சித் தலைவர் வெனான்சியோ புளோரெசிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1877 – சாய்கோவ்சுக்கியின் பாலே அன்ன ஏரி மாஸ்கோவின் பல்சோய் அரங்கில் முதல்தடவையாக மேடையேறியது.

1933 – நாட்சி கட்சிக்கு தேர்தல் நிதி சேர்ப்பதற்காக இட்லர் செருமானியத் தொழிலதிபர்களை இரகசியமாகச் சந்தித்தார்.

1935 – அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் போர் விமானங்கள் செருமனியின் வானூர்தி தயாரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தின.

1946 – இலங்கைக்கு முதன் முதலாக இரட்டைத் தட்டுப் பேருந்து கொண்டு வரப்பட்டது.[3]

1962 – மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.

1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.

1979 – நிலநடுக்கம் காரணமாக H2S நச்சு வாயு பரவியதில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் 149 பேர் உயிரிழந்தனர்.

1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்கலத்தை ஏவியது. 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் இவ்விண்கலம் நிலைகொண்டிருந்தது.

1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.

1988 – நகர்னோ-கரபாக் தன்னாட்சி மாவட்டம் அசர்பைசானில் இருந்து பிரிந்து ஆர்மீனியாவுடன் இணைய முடிவு செய்தது. இது நகர்னோ-கரபாக் போருக்கு வழிவகுத்தது.

1991 – அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில், அந்நாட்டின் நீண்ட நாள் அரசுத்தலைவராக இருந்த என்வர் ஒக்சாவின் மிகப் பெரும் சிலை ஒன்று ஆர்பாட்டக்காரர்களினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர்.

2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1844 – லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1906)

1876 – கா. நமச்சிவாய முதலியார், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1936)

1901 – பொபிலி அரசர், சென்னை மாகாணத்தின் 6வது முதலமைச்சர் (இ. 1978)

1925 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (இ. 2010)

1941 – லிம் கிட் சியாங், மலேசிய அரசியல்வாதி

1944 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (இ. 2019)

1945 – ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்

1948 – கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய-சைப்பிரசு பொருளியலாளர்

1951 – கார்டன் பிரவுன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்

1967 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (இ. 1994)

1986 – கலையரசன், தமிழ்த் திரைப்பட நடிகர்

1987 – மைல்ஸ் டெல்லர், அமெரிக்க நடிகர்

1988 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை , பாடகி (இ. 2013)

1990 – ஆதி வேங்கடபதி, இந்தியத் தமிழ் இசைக்கலைஞர்

இன்றைய தின இறப்புகள்

1762 – டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (பி. 1723)

1778 – லாரா மரியா, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1711)

1862 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. 1788)

1896 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1820)

1907 – ஆன்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)

1920 – ஜெசிந்தா மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1910)

1950 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், வழக்கறிஞர் (பி. 1889)

1972 – மரியா கோயெப்பெர்ட் மேயர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)

1960 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (பி. 1901)

1987 – ஜோசப் பாறேக்காட்டில், கத்தோலிக்கத் திருச்சபை கர்தினால் (பி. 1912)

2001 – இந்திரஜித் குப்தா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1919)

2001 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி (பி. 1918)

2008 – டி. ஜி. எஸ். தினகரன், கிறித்தவ மறைபரப்புனர் (பி. 1935)

2010 – ஸ்ரீதர் பிச்சையப்பா, இலங்கை வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1962)

2011 – மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்

2012 – ரா. கணபதி, தமிழக ஆன்மிக எழுத்தாளர், தமிழறிஞர்

2012 – எஸ். என். லட்சுமி, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (பி. 1934)

2014 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (பி. 1919)

2015 – கோவிந்த் பன்சாரே, இந்திய எழுத்தாளர் (பி. 1933)

இன்றைய தின சிறப்பு நாள்

சமூக நீதிக்கான உலக நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *