‘விரிசலை உண்டாக்கும் செயல்’…. வெடிக்கும் வன்முறைச் சம்பவங்கள்…. கண்டனம் தெரிவித்த வங்காளதேச பிரதமர்….!!

வன்முறைச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் இஸ்லாமியர்களின் புனித நூல் என்று கூறப்படும் திருக்குர்ஆனை  அவமதிக்கும் விதத்தில் சில புகைப்படங்கள் முகநூலில் வெளியிடப்பட்டது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. அதிலும் துர்கா பூஜையின் போது கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையினால் 8 பேர் பலியானதாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதற்கு காரணமானவர்கள் என்று மொத்தம் 600 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் நற்பெயரை கெடுக்கும் விதமாகவும் மதரீதியில் விரிசலை ஏற்படுத்தவும் சுயநலம் வாய்ந்த சிலர் தவறாக பரப்புரைகளை கூறி வருவதாக பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வங்காளதேசத்தை எவராலும் பின்னே கொண்டு செல்ல முடியாது. நாம் பார்க்கும் விஷயங்கள் சில திட்டமிட்டு நடத்தப்படுபவையாகும். இவ்வாறு செய்யப்படுவதால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர் எவர் பெயரையும் சுட்டிக்காட்டவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *