வாணியம்பாடி விபத்து… உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு….!!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையம் பட்டு கிராம தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரி சமுத்திரம் அரசு பள்ளிக்கு இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரபிக்(13), விஜய்(13) மற்றும் சூர்யா(10) ஆகிய மூன்று மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி உயிரிழந்தனர்.

இந்த துயர செய்தியினை கேட்டு தமிழக முதல்வர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் கூறிக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.