வனிதா பேச்சை கேட்டு கொண்டு பிக்பர்ஸ் வீட்டு ஆண்களிடம் மதுமிதா சண்டையிடும் ப்ரோமோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தினமும் இரவு 9.30 மணி ஆனதும் அனைவரையும் டிவி முன்பு அமர வைக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்கிறது என்றால் மிகையாகாது. நாள்தோறும் மக்களுக்கு சலிக்காத வகையில் விறுவிறுப்பை கூட்டி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த திங்கள்கிழமை ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதாவை மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார் பிக்பாஸ். வனிதா வீட்டிற்குள் சென்ற நாள் முதல் தினந்தோறும் ஏதேனும் ஒரு பிரச்சினையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்.

அதன்படி 52 வது நாளான இன்று ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதாக மதுவிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டுக் கொண்டு பொங்கி எழுந்த மது கவின், தர்ஷன்,முகின் ஆகியோரிடம் சென்று பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்களை பயன்படுத்துவதாகவும், அடிமை படுத்துவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கவின்,
அடிமைத்தனம் என்பது பெரிய வார்த்தை அதை ஆண்கள் யாரும் பிக்பாஸ் வீட்டில் செய்யவில்லை என்று மறுத்துவிட்டார். மீண்டும் பேசிய மது நீங்கள் அடிமைப்படுத்தவில்லை ஆனால், பயன்படுத்துகிறீர்கள் என்று மீண்டும் பதிலளித்தார். மேலும் பிக்பாஸ் வீட்டின் கதவு இரண்டு நிமிடங்கள் திறந்து வைத்து யார் வெளியே செல்ல விரும்புகிறீர்கள் என்று கூறினால் முதல் ஆளாக நான் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மதுவின் பேச்சை கண்ட நெட்டிசன்கள் ஓவராக நடிப்பதாகவும், முதலில் மதுவை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.