“மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கு ” மகன்-மனைவி கைது…!!!

வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை  கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர்.   

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள  அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி.  57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும்  அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக பூஜையில்  ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து  அங்கு வந்த அவருடைய மனைவி மற்றும் மகன் மாந்திரீக பூஜைக்கு ஏதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டு  அவர்கள் கத்தி, இரும்பு குழாய் ஆகியவற்றால் பாலாஜியை தாக்கி விட்டு சென்றனர்  உயிருக்கு போராடிக்கொண்டிருந்த  அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசுமருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.ஆனால் பாலாஜி வழியிலையே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றன.