“குறைபிரசவத்தில் பிறந்துருக்கு” குட்டி யானைக்கு ஏற்பட்ட விபரீதம்…. வனத்துறையினரின் தகவல்….!!

வனப் பகுதியில் குட்டி யானை இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் நாள்தோறும் வன விலங்குகளின் பாதுகாப்பு, வெளி நபர்களின் நடமாட்டம், உணவு மற்றும் நீர் ஆதாரத்தை ஆய்வு செய்வதற்காக சுற்று வாரியாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது சடையம்பாறை பகுதியில் உடுமலை வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு யானைக்குட்டி ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதனைப் பார்த்த வனத்துறையினர் கால்நடை மருத்துவரின் உதவியுடன் யானை குட்டியை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுவதாவது, யானையின் கர்ப்பகாலம் 20 முதல் 22 மாதம் ஆகும். ஆனால் கர்ப்பம் தரித்த யானை 18 மாதத்திலேயே பெண் குட்டியை ஈன்றுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் குறைபிரசவத்தில் யானை பிறந்ததால் அதற்கு இறப்பு ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *