வல்லபாய் படேல் , வாஜ்பாய் கனவு நினைவாகியுள்ளது… பிரதமர் மோடி பெருமிதம்

சர்தார் வல்லபாய் படேல் , வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. வல்லபாய் படேல் , அம்பேத்கர் ,ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்திய ஒற்றுமையில் உறுதியாக இருந்தனர். காஷ்மீரில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மக்களை மனதார பாராட்டுகின்றேன்.

Seithi Solai

காஷ்மீரில் இதுவரை 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால் யாரும் கேட்கவில்லை. 370 சட்டப்பிரிவு தீவிரவாதத்திற்கு , ஊழலுக்கும் ஊக்கம் அளித்துக் கொண்டிருந்தது. காஷ்மீரில் சில குடும்பங்களில் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 370 பிரிவு காஷ்மீரில் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.சிறப்பு சட்டப்பிரிவை ரத்து செய்வதன் மூலம் சர்தார் வல்லபாய் படேல் , வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது.