வாழ்க்கையை வழி நடத்த… இந்த 10 தன்னம்பிக்கை வரிகள் போதும்…!!!


வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது… தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது.!!.நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.

கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அது கடுகளவும் கை கொடுப்பதில்லை.. முயற்சி செய்ய தயங்காதே முயலும்போது உன்னை முட்களும் முத்தமிடும்..!

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி…!!

கடினமான வாழ்க்கை என்று கலங்காதே அங்கேதான் நம் வாழ்வை உயர்த்தும் சந்தர்ப்பங்களும் ஒளிந்திருக்கும்..!! இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லாதபொழுது உன் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்..!!

கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு லட்சியம்..!

வாழ்வில் நீ வெற்றிபெறும்  போதெல்லாம் தோல்வி உன் நினைவில் வந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது.

சென்று கொண்டிருப்பவன் காலத்தை வென்று கொண்டிருக்கிறான்.. நின்று கொண்டிருப்பவன் காலத்தை தின்று கொண்டிருக்கிறான்..

நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும் தான் வரும்!

எட்டிப் பிடிக்கும் தூரத்தில் வெற்றி இல்லை.. அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை!!கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்..!

உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை..

கவலைகள் ஒருபொழுதும் வெற்றியைத் தருவதில்லை.. முயற்சிகளே..!சுமைகளை கண்டு துவண்டு விடாதே இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.. பிறப்பு இறப்பு மட்டுமே நம்மைத் தேடி வரும் மற்றவற்றை நாம் தான் தேடி செல்ல வேண்டும்..

அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்..!!

உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள் ஏனெனில்…வேறு எவராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது..!

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே..உன்னதமான ஒவ்வொரு வேளையும் முதலில் முடியாததாகவே தோன்றும்..

எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும்… எல்லாம் உள்ளபோது நீ நடந்து கொள்ளும் முறையும்… வெற்றியை தீர்மானிக்கிறது…!! வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும் வலிகள் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்..!!

மனதில் ஓர் உறுதி, வெளியில் சரியாக சூழ்நிலை இரண்டையும் உருவாக்கினால், ஆசைப்பட்டதைத்  தள்ளிப்போடாமல் செய்து முடிக்கும் பலம் தானாக வந்துவிடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *