கொலை செய்யப்பட்ட வாலிபர்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மகளிர் அணி செயலாளர் ஜானகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள ஐ.டி.ஐ நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலக்கரி சுரங்கம் எதிராக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தேவா, சுதாகர், ஜெயசூர்யா, நீலகண்டன், பிரவீன், ராகுல் ஆகியோர் இணைந்து அருண்குமாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் ராகுல் கொடுத்த வாக்குமூலத்தில் தனது சகோதரர் ஹரிகிருஷ்ணனிற்கும் அவருடைய நண்பரான அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஹரிகிருஷ்ணன் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபம் அடைந்த எனது தாய் ஜானகி அருண்குமாரை கொலை செய்யுமாறு கூறினார்.

அதனால் நாங்கள் ஐந்து பேரும் இணைந்து அருண்குமாரை கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஜானகி தலைமறைவாகி இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை வலைவீசி தேடிய காவல்துறையினருக்கு ஜானகி சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜானகியை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *