என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் சுபாஷ் விஷம் குடித்துவிட்டு சாலையோரம் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சுபாஷை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.