சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் 1 வயது முதல் உடன்குடி பகுதியில் வசிக்கும் சுடலை ஆசாரிக்கு தத்துப் பிள்ளையாக கொடுக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சென்னையில் உள்ள கல்குவாரியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் உடன்குடி வந்தவர் திரும்பி செல்லவில்லை.

இந்நிலையில் செந்தில்குமார் தனது வீட்டு மாடியில் உள்ள ஒரு அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரபட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை உடலை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *