குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. போலீஸ் நடவடிக்கை…..!!

மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மகள் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பேரின்பராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சகுந்தலா தேவி தனது தந்தை வீடான ரவிக்குமாரின் வீட்டில் வசித்து வருகிறார். இதனை தொடர்ந்து பேரின்பராஜ் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். அதன் பிறகு சகுந்தலா தேவியை தன்னுடன் வாழ வர வேண்டும் என பேரின்பராஜ் வற்புறுத்தியுள்ளார். இதனை சகுந்தலா தேவி ஏற்றுக் கொள்ளாத நிலையில் பேரின்பராஜ் தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளார். இதில் சகுந்தலா தேவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சகுந்தலா தேவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து ரவிக்குமார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேரின்பராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *