“என் கடனை திருப்பி தா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!

கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் விஷம் குடித்துவாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நாகப்பாடியை  சேர்ந்த மணியரசு என்பவருக்கு ரூபாய் 40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதில் கடனும் வட்டியும் மணியரசு கட்டாத நிலையில் அவற்றை  வசூலிப்பதற்காக  சங்கர் அவர்  வீட்டிற்கு சென்றார். இதனைக் கேட்டு மனம் உடைந்த மணியரசு விஷம் அருந்தி விட்டு சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது திடீரென மயக்கம் அடைந்த மணியரசை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிக்கிசை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மணியரசு உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் மணியரசுக்கு பஞ்சவர்ணம், தமிழ் முருகன் என்ற மகன்கள் உள்ளனர். மேலும்  மணியரசு  மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *