நிற்காமல் சென்ற கார்….. துரத்தி சென்ற போலீஸ்….. சோதனையில் தெரிந்த உண்மை….!!

ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த வழியாக வந்த காரை நிறுத்த காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று கொண்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த காரை துரத்தி சென்று கிராம மக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பிறகு அந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ரேஷன் அரிசி மற்றும்  காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கமலக் கண்ணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *