“வாஜ்பாய்”மறைந்தும் மக்கள் மனதில் நிற்கும் உன்னத தலைவர்…. மோடி புகழாரம்..!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு  தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய நாட்டின் வளர்ச்சியில் எப்பொழுதும் வாஜிபாய்க்கு முக்கிய பங்கு உண்டு என்றும்,

Image result for vaj bhai modi

மறைந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பதாகவும்  அவர் தெரிவித்தார். இந்நிலையில் வாஜ்பாய் அவர்களது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.