“ஊரடங்கு” இப்ப தனிமை….. அப்புறம் இனிமை…. வைரமுத்து ட்விட்….!!

நாளை ஊரடங்கு உத்தரவு குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆகையால் அந்த வைரஸ் பரவலை தடுக்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், நாளை ஒருநாள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

 பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் அறைகூவலுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனதா curfew கருத்துக்கு ஆதரவாக இரண்டு அறைகூவல்கள் இந்தியாவில் ஒலித்து வருகிறது. ஒன்று நம்மை காத்தல். மற்றொன்று நாடு காத்தல். தற்போதைய நிலைமைக்கு நாளை நம்மை காக்க தனிமைப்படுவோம். பின்  நாட்டைக் காக்க பிறகு ஒன்றுபடுவோம் செய்துள்ளார்.