தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வைகோ …..!!

சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் , 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Image result for வைகோ

இந்நிலையில் 2009ம் ஆண்டில் பதிவான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கடந்த 5ந்தேதி தீர்ப்பு வழங்கியதில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனை வழங்கியது தவறு என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ  , தனது தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கின்றது.