பிப்ரவரி 1 முதல் விலை உயர்வு…. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…..!!!!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது தனது வாகனங்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப 1.25% வரை விலை உயர்த்தப்படுகிறது. ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்த செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கொரோனா தொற்று நோய் காரணமாக வாகனத் தொழில் ஏற்கனவே மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இப்போது விலை உயர்வு அவசியமான நடவடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் புது மாடல்களின் அறிமுகம் மற்றும் தனிநபர் தேவை அதிகரித்து வருவதால், சமீபத்திய மாதங்களில் அந்நிறுவனம் வலுவான ஒரு விற்பனையை பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.