புதிய வைரசுக்கு தடுப்பு மருந்து…. 6 வாரங்களில் கண்டுபிடிக்க முடியும் – பயோன்டெக்…!!

புதிய கொரோனா வைரசுக்கு 6 வாரங்களில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலானது உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் புதிய உச்சத்தில் இருந்து வருகிற சூழலில் புதிதாக ஒரு புதிய வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது முந்தைய வைரஸை விட புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி உள்ளது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு அறிவித்துள்ளது. மேலும் பிரிட்டன் விமானங்களுக்கும் தடை விதித்துள்ளன. எனவே உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் பல நாடுகள் தொடங்கியுள்ளன. பைசர் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள பயோன்டெக் நிறுவனம் புதிய வைரசுக்கு 6 வாரங்களில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு திறம்பட செயல்படும் என்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை. தற்போதைய தடுப்பு மருந்தே புதிய கொரோனா வைரஸ்க்கு போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.