வாரிசு VS துணிவு வசூல்…. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்…. முதலிடத்தில் எது தெரியுமா?…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகின் 2 முக்கிய நடிகர்களான தளபதி விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் தல அஜித் நடிக்கும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. பல்வேறு மொழிகளில் வெளியான இந்த இரண்டு நடிகர்களின் திரைப்படங்களும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதில் துணிவு திரைப்படம் வங்கி கொள்ளை குறித்த கதைக்களமாக அமைந்தது. அதேபோல் விஜய்யின் வாரிசு படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கிறது. இப்போது 2  படங்களும் நல்ல வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் 15 நாட்கள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் ரூ. 118 கோடியும், விஜய் நடித்த வாரிசு ரூபாய்.119 கோடியும் வசூலித்துள்ளது. இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.