வாரிசு படத்திலும் டூப்…. நடித்தது யார் தெரியுமா?…. வெளியான புகைப்படம்….!!!!

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி திரைக்கு வந்தது. தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கத்தில் உருவாகிய இப்படம் தற்போது 300 கோடி வசூலை கடந்து உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் போட்டிக்கு ரிலீசான துணிவு திரைப்படத்தை விட வாரிசு பட மொத்த வசூல் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக துணிவு திரைப்படத்தில் அஜித் சில காட்சிகளில் டூப் பயன்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வாரிசு விஜய்க்கும் ஒருவர் சண்டை காட்சிகளில் டூப் ஆக நடித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.