“8 பக்க கடிதம்”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… வாலிபரின் விபரீத செயல்….!!

குடும்ப தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்  நாகராஜன்- கவிதா. நாகராஜன் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு  இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து கவிதா நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகன்களுடன் சென்றுவிட்டார்.

இதனால் நாகராஜன் மட்டும்  வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நாகராஜனின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று முன்தினம் மாலை ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அப்போது நாகராஜன் தூக்கில் தொங்கியதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நாகராஜன் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய  8 பக்க கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அக்கடிதத்தில் நான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்னுடைய மனைவி, மாமியார் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் என்று குறிப்பிட்டதோடு என்னுடைய மனைவி அவர் குடும்பத்தாரின் பேச்சை கேட்டு செயல்பட்டதால் எங்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது . இதனால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று எழுதியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.