என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் சதீஷ்குமாரின் பெற்றோர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் சதீஷ்குமார் கதவை திறக்கவில்லை.

இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சதீஷ்குமார் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *