ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு… வாலிபர் ரத்த வெள்ளத்தில்… பரிதவிக்கும் குழந்தைகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்துப்பாண்டி- சூர்யா. தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முத்து பாண்டியின் மனைவி சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு  முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது குழந்தைகள் உறவினர் வீட்டில்  வசித்து வருகின்றனர். முத்துப்பாண்டி தனது தாயாருடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி  சிமெண்ட் சீட் பொருத்தும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இதனையடுத்து நேற்று இரவு வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் அங்குள்ள சாலையின் அருகே முத்துப்பாண்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். கொலை குறித்து தகவலறிந்த  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துப்பாண்டியன் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து  காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவருடன் வேலை பார்க்கும் சிலரால் முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது . மேலும்  காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளியை  தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.