அதிர்ச்சி சம்பவம்…. டெல்லியில் காரில் வைத்து உஸ்பெகிஸ்தான் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

டெல்லியில் உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் 2 வருடத்திற்கு முன்பே டெல்லி வந்து, தனது நாட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் அறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமாகி, நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதியன்று அப்பெண்ணுக்கு போன் செய்து அந்த இளைஞர்  தெற்கு டெல்லியில் உள்ள மால் ஒன்றுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

Image result for rape

அதன்படி இப்பெண்ணும் கிளம்பி சென்றுள்ளார். அங்கே வந்தபிறகு அந்த இளைஞன் காரில் ஏறும்படி கூற, அப்பெண்ணும் ஏறினார். காரில் ஏற்கனவே அவரது நண்பர்கள் இரண்டு  பேர்  இருந்தனர். கார் சிறிது தூரம் சென்ற பின் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து 3 பேரும் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அப்பெண்ணை சரமாரியாக தாக்கிய அவர்கள் காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பி சென்றனர்.

Image result for rape

பின்னர் தான் தங்கியிருந்த அறைக்கு வந்த அவர் நடந்தவற்றையெல்லாம் தனது தோழியிடம் கண்ணீருடன் கூறினார்.  இதையடுத்து பாதிக்கப்பட்ட அவரை தோழி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *