“பரிசுப்பெட்டி இல்லை காலிப்பெட்டி” அமைச்சர் உதயகுமார் விமர்சனம்….!!

அமமுக சின்னம் பரிசுப்பெட்டி இல்லை இது ஒரு காலிப்பெட்டி என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை வழங்கியது. இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தது. தேர்தல் இருப்பவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தான் இருப்பார்கள் மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்றால் 47 ஆண்டுகாலம் எந்த சின்னம் அவர்களுக்கு முகவரி கொடுத்ததோ எந்த சின்னம் அவர்களுக்கு வாழ்வு கொடுத்ததோ ,  எந்த சின்னம் அவர்களை வாழ வைத்தது அந்த சின்னத்தை தோற்கடிக்க வேண்டும் என்று என்ன பரிசு கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் அது பரிசுப்பெட்டி இல்லை அது ஒரு காலிப்பெட்டி அதில் பரிசு இருக்காது..

பரிசுப்பெட்டி க்கான பட முடிவு

இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்துவிட்டு இரட்டை இலை சின்னத்தை பெறுவேன் என்பது யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருவரை வாழ வைக்கிறேன் என்று சொல்லி சாகடித்து விட்டு பின்னர் பிறகு வாழவைப்பேன்  என்பதுதான் இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து வெற்றி பெறுவேன் என்ற நிகழ்வு . எந்த சின்னதால் வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களோ அந்த சின்னத்தை ஒழிப்பேன் என்று சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆகவே இந்த  சின்னத்தோடு  பிரச்சாரம் செய்து வென்று விடலாம் என்கின்ற அவரின் கனவு பகல் கனவாகவே இருக்கும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.