பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்…. ஏழை-எளிய மக்களுக்கு உதவும் விவசாயி…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் ஏழை-எளிய மக்களுக்கு விவசாயி இலவசமாக வாழைப்பழத்தை வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இதனால் ஏழை-எளிய பொதுமக்கள் உணவின்றி தவித்து வரும் நிலையில், சில தன்னார்வலர்களும், காவல்துறையினரும் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழை-எளிய பொது மக்களுக்கு தன்னுடைய தோட்டத்தில் விளைந்த வாழைப்பழத்தை இலவசமாக வழங்குகிறார். மேலும் கணேசன் “பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்” என்ற வாக்கியத்தை தகவல் பலகையில் எழுதி தள்ளுவண்டி கடையில் வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *