உத்தரகாண்டில் பரவிய … மோசமான காட்டுத் தீ… தீயை அணைக்க போராடி வரும் வீரர்கள் …!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ பரவியதால், தேசிய பேரிடர் மீட்பு  குழுவினர் உதவியுடன் ,தீயை அணைக்க போராடி வருகின்றனர் .

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மோசமான வானிலை காணப்படுகிறது. இதனால் கடும் வெப்ப நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி உத்தரகாண்டில் காட்டுப்பகுதியில் காட்டுத் தீ பரவுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயானது, மிகவும் பயங்கரமானதாக காணப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர்  பரப்பளவுகள் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீக்குள் சிக்கி  4 பேர் உயிரிழந்தனர்,2 பேர் படுகாயமடைந்தனர் .மேலும் காட்டு பகுதியியில்  7 விலங்குகள் இறந்துள்ளது .

எனவே காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த ,வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் மொத்தம் 12,000 பேர் காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரை , அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை மந்திரியான அமித்ஷா கூறியுள்ளார். எனவே உத்தரகாண்டில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ,அம்மாநில முதலமைச்சர்  திராத் சிங் ராவத் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன், ஹெலிகாப்டர் மூலமாக காட்டுத்தீயை அணைப்பதற்கு  வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து வீரர்களும் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.