யுஸ் ஓபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முன்னேறினார் அரினா சபலென்கா ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அரினா சபலென்கா, கிரெஜ்சிகோவா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் .

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில்  நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில்
பெலாரஸை சேர்ந்த அரினா சபலென்கா, பெல்ஜியம் வீராங்கனை எலைஸ் மெர்டன்ஸை எதிர்த்து  மோதினார்.

இதில் 6-4, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .இதை தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா, ஸ்பெயின் நாட்டு வீராங்கனை கார்பைன் முகுருசாவை  எதிர்கொண்டார் .இதில் 6-3, 7-6  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற  கிரெஜ்சிகோவா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *