யுஸ் ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்று ஆட்டத்தில் …. ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வியடைந்தார் .

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, தரவரிசையில் 43-வது இடத்திலுள்ள அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸை எதிர்கொண்டார் .இதில் முதல் இரண்டு செட்களையும்  இருவரும் தலா ஒன்று வீதம் வென்றனர்.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆஷ்லே பார்ட்டி ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் அவர் செய்த தவறால்   6-7 என்ற கணக்கில் கோட்டை விட்டார். இறுதியாக 6-2, 1-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில்  ஷெல்பி ரோஜர்ஸ் வெற்றி பெற்றார் . இதன் மூலமாக நம்பர் ஒன் வீராங்கனையை ஷெல்பி ரோஜர்ஸ் தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும்.